என் மலர்
இந்தியா

1000 ரூபாய் கடன் தகராறில் டிராக்டர் டிரைவர் அடித்துக்கொலை
- ஏலூர் மாவட்டம் நூஜ் வேடு பகுதியை சேர்ந்தவர் கொல்லப்பள்ளி சீனிவாசராவ்.
- சீனிவாசராவ், ரங்காவிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டு வந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம் நூஜ் வேடு பகுதியை சேர்ந்தவர் கொல்லப்பள்ளி சீனிவாசராவ் (வயது 45). டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ரங்கா (30). சீனிவாசராவிடம் ரங்கா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1000 கடனாக பெற்றுள்ளார்.
சீனிவாசராவ், ரங்காவிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டு வந்தார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை ரங்கா வீட்டிற்கு சென்ற சீனிவாசராவ் கொடுத்த கடனைக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த ரங்கா அருகிலிருந்த கட்டையை எடுத்து சீனிவாசராவை சரமாரியாக தாக்கினார். இதில் சீனிவாசராவ் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சீனிவாசராவை மீட்டு சிகிச்சைக்காக ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சீனிவாசராவ், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.கொலை செய்யப்பட்ட சீனிவாசராவிற்கு மனைவி, 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.






