search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூரில் 5 நாட்கள் இணையதள சேவை முடக்கம்
    X

    மணிப்பூரில் 5 நாட்கள் இணையதள சேவை முடக்கம்

    • மணிப்பூர் மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
    • மணிப்பூர் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இம்பாலா:

    மணிப்பூர் மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி நடந்து வருகிறது. தங்கள் கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி அனைத்து பழங்குடி இன மாணவர் அமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் அவர்கள் மறியல் செய்தனர்.

    இந்த நிலையில் பிஷ்ணு பூர் மாவட்டம் பூகாகசாவ் கிராமத்தில் நேற்று மாலை 4 பேர் கொண்ட கும்பல் வேனுக்கு தீ வைத்தது. நேற்று இரவு மாணவர் அமைப்பினர் அரசை கண்டித்து ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் மாணவர் அமைப்பை சேர்ந்த 30 பேர் காயம் அடைந்தனர். போலீசார் 5 பேரை கைது செய்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் போராட்டத்தை தீவிர படுத்தவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டன. இதனால் கலவரம் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பதட்டத்தை தணிக்க இணையதள சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக மாநில கூடுதல் செயலாளர் ஞானபிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொதுமக்களிடம் வெறுப்புணர்வை பரப்பும் வகையில் சமூகவலை தளங்களில் கருத்துகள் பரவாமல் தடுக்க இன்று முதல் 5 நாட்கள் மொபைல் இணையதள சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் 2 மாதங்கள் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார் .

    பல்வேறு பகுதியில் கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதால் மணிப்பூர் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×