search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வேகமாக பரவும் கோடை கால நோய்கள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வேகமாக பரவும் கோடை கால நோய்கள்

    • மக்கள் கோடைகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களை கடைபிடிக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
    • நீதிமன்றங்களில் ஆஜராகும் வக்கீல்கள், கருப்பு நிற கோர்ட் மற்றும் கவுனுக்கு பதிலாக வெள்ளை நிற ஆடைகளை அணியலாம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கடுமையாக அடித்து வந்தது. இந்நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது.

    பாலக்காடு, புனலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்து வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் வகையில் தினமும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களின் விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.

    மேலும் மக்கள் கோடைகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களை கடைபிடிக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் அம்மை உள்ளிட்ட கோடைகால நோய்கள் வேகமாக பரவி வருகிறது.

    அங்கு கடந்த 10 நாட்களில் 900 பேருக்கு மேல் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 90 பேருக்கு மேல் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரளாவில் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரிக்கும் என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

    இந்நிலையில் கோடை வெயிலின் காரணமாக கோர்ட்டுகளில் கருப்பு கோர்ட்டு அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் வக்கீல்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. அது தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் நீதிமன்றங்களில் ஆஜராகும் வக்கீல்கள், கருப்பு நிற கோர்ட் மற்றும் கவுனுக்கு பதிலாக வெள்ளை நிற ஆடைகளை அணியலாம் என்று கூறியிருக்கிறது. இந்த சலுகை அடுத்தமாதம் (மே)31-ந்தேதி வரை வக்கீல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×