என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவிலில் குரங்குகளை விரட்ட ஸ்மார்ட் குச்சிகள் அறிமுகம்
    X

    திருப்பதி கோவிலில் குரங்குகளை விரட்ட ஸ்மார்ட் குச்சிகள் அறிமுகம்

    • ஸ்மார்ட் குச்சிகளில் இருந்து வரும் சத்தத்தை கேட்டு குரங்குகள் வாலை ஆட்டியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்து செல்கிறது.
    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன.

    அவைகள் பக்தர்கள் கொண்டு செல்லும் பூஜை பொருட்கள், பழங்கள் உள்ளிட்டவைகளை பறித்து செல்வதால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    பக்தர்களின் சிரமத்தை போக்க தேவஸ்தான அதிகாரிகள் காட்டு விலங்குகளை விரட்ட பயன்படுத்தும் ஸ்மார்ட் குச்சிகளை கொள்முதல் செய்துள்ளனர்.

    ஏற்கனவே அலிபிரி நடைபாதையில் குரங்குகளை விரட்ட இது போன்ற ஸ்மார்ட் குச்சிகள் பயன்படுத்தப்படுகிறது.

    ஸ்மார்ட் குச்சிகளில் இருந்து வரும் சத்தத்தை கேட்டு குரங்குகள் வாலை ஆட்டியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்து செல்கிறது. நடைபாதையில் செல்லும் பக்தர்கள் இதனைக் கண்டு ரசித்தபடி செல்கின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

    15-ந் தேதி கோவில் வளாகம் மற்றும் கருவறை சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. அன்று 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இதே போல் வருகிற 14 மற்றும் 15-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×