என் மலர்
இந்தியா

தவறுதலாக ஒடிசாவுக்குள் நுழைந்த SIR அதிகாரிகள்: தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்..!
- மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருகிறது.
- அதிகாரிகள் இருவர் தவறுதலாக ஒடிசா மாநிலத்திற்குள் நுழைந்ததால், கிராம மக்கள் தாக்குதல்.
மேற்கு வங்க மாநிலத்தில் SIR பணி நடைபெற்று வருகிறது. SIR பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள நயகிராம் என்ற இடத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது வழி தவறி தவறுதலாக ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்குள் சென்றுவிட்டனர்.
அங்குள்ள கிராம மக்கள், இரு அதிகாரிகளையும் குழந்தை கடத்துவதற்காக வந்துள்ளனர் என்று சந்தேகப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, கிராம மக்களுடன் தகராறு செய்துள்ளனர். இதனால் கிராம மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாருடனும் கிராம மக்கள் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர், போலீசார் இரண்டு அதிகாரிகளையும் மீட்டனர். மேலும், 72 கிராம மக்கள் மீது இச்சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் செய்துள்ளனர்.
Next Story






