என் மலர்tooltip icon

    இந்தியா

    12 மற்றும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி நீக்கம்: எப்போது அமலுக்கு வரும்?
    X

    12 மற்றும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி நீக்கம்: எப்போது அமலுக்கு வரும்?

    • 12 மற்றும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி அடுக்கு நீக்கப்பட்டது.
    • இனிமேல் 5 மற்றும் 18 சதவீதம் அடிப்படையில்தான் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும்

    சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளி போனஸ்-ஆக ஜிஎஸ்டி-யில் அதிரடி மாற்றம் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    அண்மையில் ஜிஎஸ்டி-க்கான மந்திரிகளின் ஜெனரல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12 மற்றும் 28 சதவீதம் ஆகிய அடுக்கு (Slap) வரியை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகிய இரண்டு அடுக்கில்தான் ஜிஎஸ்டி வரி வசூல் வசூலிக்கப்படும். இதனால் 90 சதவீதம் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இதனையடுத்து, 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் மாற்றங்கள் இறுதியாகும் என்று சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், புதிய ஜிஎஸ்டி வரி முறைகள் குறித்த அறிவிப்பு செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவராத்திரி பண்டிகையை முன்னட்டை இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×