என் மலர்tooltip icon

    இந்தியா

    விலை உயர்வுடன் சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு: #MamataBanerjee கடும் கண்டனம்
    X

    விலை உயர்வுடன் சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு: #MamataBanerjee கடும் கண்டனம்

    • 21 நாட்களுக்கு பின்பே இரண்டாவது சிலிண்டர் முன்பதிவு என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    • இடையில் சிலிண்டர் தீர்ந்து போனால் வீட்டிற்கு நேரடியாக உணவு டெலிவரி செய்வீர்களா?

    மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமையல் சிலிண்டருக்கான விலை இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் விலை உயர்வுடன் முன்பதிவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "சமையல் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது, அத்துடன் 21 நாட்களுக்கு பின்பே இரண்டாவது சிலிண்டர் முன்பதிவு என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு ஏன்?.

    இடையில் சிலிண்டர் தீர்ந்து போனால் வீட்டிற்கு நேரடியாக உணவு டெலிவரி செய்வீர்களா? மற்றவர்கள் உங்களை பார்த்து பயப்படலாம். நான் பயப்படமாட்டேன்" என்றார்.

    Next Story
    ×