search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கோழிக்கோட்டில் பெற்றோரின் முழு சொத்தும் மகள்களுக்கு கிடைக்க மீண்டும் மறுமணம் செய்யும் முஸ்லீம் தம்பதி
    X

    சுக்கூர்-ஷீனா தம்பதி.

    கோழிக்கோட்டில் பெற்றோரின் முழு சொத்தும் மகள்களுக்கு கிடைக்க மீண்டும் மறுமணம் செய்யும் முஸ்லீம் தம்பதி

    • திருமணத்தை உலக மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
    • ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை இருக்கும் இந்த காலத்தில் இதுபோன்ற பாரபட்சம் காட்டுவது தவறாகும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுக்கூர். பிரபல வக்கீல்.

    இவரது மனைவி டாக்டர் ஷீனா. மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். முஸ்லீம் தம்பதியான இவர்கள் இருவரும் கடந்த 1994-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    முஸ்லீம் ஷரியத் சட்டப்படி இவர்களின் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். முஸ்லீம் ஷரியத் சட்டப்படி சுக்கூர்-ஷீனா தம்பதியின் அனைத்து சொத்துக்களும் அவர்களின் மகள்களுக்கு கிடைக்காது. 3-ல் 2 பங்கு சொத்துக்கள் மட்டுமே கிடைக்கும்.

    இதற்காக சிறப்பு திருமண சட்டப்படி சுக்கூர்-ஷீனா தம்பதியினர் மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுபற்றி சுக்கூர் கூறியதாவது:

    முஸ்லீம் ஷரியத் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் சொத்தில் 3-ல் 2 பங்கு மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள சொத்துக்கள் அனைத்தும் அவர்களின் சகோதரர்களுக்கு கிடைத்து விடும்.

    ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை இருக்கும் இந்த காலத்தில் இதுபோன்ற பாரபட்சம் காட்டுவது தவறாகும். இதை என்னால் ஏற்க முடியவில்லை.

    எனவே நான் 1954-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு திருமண சட்டத்தின் மூலம் நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். அந்த திருமணத்தை உலக மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

    இதன்மூலம் எங்கள் மகள்களுக்கு எங்களின் அனைத்து சொத்தும் முழுமையாக கிடைக்கும். இதற்காகவே இந்த திருமணத்தை செய்ய உள்ளோம்.நான் 2 முறை விபத்தில் சிக்கி உள்ளேன். எங்களுக்கு பிறகு எங்கள் மகள்களுக்கு எங்களின் அனைத்து சொத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்த முடிவை எடுத்துள்ளோம். இதனை செயல்படுத்த மகளிர் தினத்தை விட சிறந்த நாள் இருக்க முடியாது என்பதால் அந்த நாளை தேர்வு செய்தோம் என்றார்.

    Next Story
    ×