search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோழிக்கோட்டில் 13வயது சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல்
    X

    கோழிக்கோட்டில் 13வயது சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

    • அறிகுறிகள் யாருக்கும் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • சிறுவன் வீடு உள்ள பகுதியில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொடியத்தூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். க்யூலைக்ஸ் இனத்தை சேர்ந்த கொசுக்களால் இந்த காய்ச்சல் பரவுகிறது.

    விலங்குகளையே பாதிக்கும் இந்த காய்ச்சல், மனிதர்களை அரிதாக தாக்குகிறது. சிறுவனுக்கு பாதித்திருக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேறு யாருக்கும் வந்துள்ளதா? என்று சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால் வேறு யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த நோய்க்கு காய்ச்சல், தலைவலி, சோம்பல் உளிட்டவைகளே அறிகுறிகளாக இருக்கின்றன.

    அந்த அறிகுறிகள் வேறு யாருக்கும் இருக்கிறதா? என்று கணக்கிடப்பட்டு வருகிறது. மேலும் மேற்கண்ட அறிகுறிகள் யாருக்கும் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி சிறுவன் வீடு உள்ள பகுதியில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.

    Next Story
    ×