என் மலர்

  இந்தியா

  திருப்பதி பஸ் நிலையத்தில் 2 வயது குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெற்றோர்
  X

  திருப்பதி பஸ் நிலையத்தில் 2 வயது குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெற்றோர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணபதி தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஜோகித் சத்திய வெங்கட் ஆகியோருடன் திருப்பதியில் தரிசனம் செய்ய வந்தார்.
  • பஸ் நிலையத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு, சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் கணபதி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஜோகித் சத்திய வெங்கட் ஆகியோருடன் திருப்பதியில் தரிசனம் செய்ய வந்தார்.

  நேற்று மாலை தரிசனம் முடித்து திருப்பதிக்கு வந்த கணபதி தம்பதியினர் தூங்கிக்கொண்டு இருந்த தனது குழந்தையை சென்னை பஸ் நிறுத்தம் இடத்தில் விட்டு விட்டு சென்றனர். பெற்றோர் அருகில் இல்லாததை கண்ட குழந்தை அழத்தொடங்கியது. நீண்ட நேரம் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இதனை கண்ட அங்கிருந்த பஸ் டிரைவர்கள் இதுகுறித்து திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

  பஸ் நிலையத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையின் பெற்றோர் குழந்தையை பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சென்றது பதிவாகி இருந்தது. சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பஸ் நிலையம் அருகே சுற்றிக்கொண்டிருந்த குழந்தையின் பெற்றோரை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.

  குழந்தையை எதற்காக பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்றீர்கள், குழந்தையிடம் ஏதாவது குறைபாடு உள்ளதா என போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×