search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இன்று தேசிய ஒற்றுமை தினம் - ராணுவத்தினர் வீரம், தியாகத்தை போற்றுவோம்!
    X

    இன்று தேசிய ஒற்றுமை தினம் - ராணுவத்தினர் வீரம், தியாகத்தை போற்றுவோம்!

    • சீனா-இந்தியா போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
    • சீனா-இந்திய போர் நவம்பர் 21-ம் தேதி வரை நீடித்தது.

    இந்தியாவில் அக்டோபர் 20 ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் தான் 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இது இந்தியா-சீனா போராக உருவெடுத்தது.

    இந்த போரில் இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தை பரைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சீன தாக்குதலை எதிர்கொண்டு தாயகத்தை காப்பாற்ற இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை இந்த நாளில் போற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

    இதோடு 1962 சீனா-இந்தியா போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தேசிய ஒற்றுமை நாள் என்பது நம் தேசத்தை பாதுகாக்க ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை அனைத்து இந்தியர்களுக்கும் நினைவூட்டும் வகையிலான முயற்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    அக்டோபர் 20-ம் தேதி இந்தியாவின் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களை சீனா ஆக்கிரமித்த போது தொடங்கிய சீன-இந்திய போர் நவம்பர் 21-ம் தேதி வரை நீடித்தது. இதன் பிறகு, சீனா இந்தியா பிரதேசங்களில் இருந்து விலக துவங்கியது. இந்த போரில் இந்தியா தரப்பில் 3 ஆயிரத்து 250 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    Next Story
    ×