search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அம்ரித்பால் சிங் அடைக்கப்பட்டுள்ள அசாம் சிறையில் பல அடுக்கு பாதுகாப்பு
    X

    அம்ரித்பால் சிங் அடைக்கப்பட்டுள்ள அசாம் சிறையில் பல அடுக்கு பாதுகாப்பு

    • 37 நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    • ஜெயிலில் உள்ளேயும் வெளியேயும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    கவுகாத்தி:

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் நேற்று பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங் மீது பல வழக்குகள் இருந்தது. கடந்த மாதம் 18-ந்தேதியில் இருந்து அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவருக்கு நெருக்கமானவர்கள் 8 பேர் கைதாகி இருந்த நிலையில் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

    மாறுவேடத்தில் சுற்றி திரிந்த அவர் போலீசுக்கு கடும் சவாலாக திகழ்ந்தார்.

    37 நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் சிறப்பு விமானம் மூலம் பதிண்டாவில் இருந்து அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் திப்ரூசர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    விமான நிலையத்தில் இருந்து மத்திய சிறை வரையிலான 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அவருக்கு நெருக்கமான 9 பேர் இதே ஜெயிலில்தான் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் அம்ரித்பால் சிங் அடைக்கப்பட்டுள்ள திப்ரூதர் சிறையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளி நபர்கள் யாரும் நுழைந்து விடாமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஜெயிலில் உள்ளேயும் வெளியேயும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    பல உயர்மட்ட விளக்குகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சிறை கண்காணிப்பில் உள்ளது.

    திப்ரூதர் ஜெயில் அசாமில் உள்ள 2-வது பழமை வாய்ந்த ஜெயிலாகும். 1857-ம் ஆண்டு இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது.

    Next Story
    ×