என் மலர்
இந்தியா

கணிதம் பரீட்சை எழுதபோன இடத்தில் குழந்தை பெற்ற 10-ம் வகுப்பு மாணவி: ஆசிரியர்கள் அதிர்ச்சி..!
- 34 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் குழந்தை பெற்றுள்ளார்.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதபோன இடத்தில் 17 வயது மாணவி குறைமாத குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை கணிதம் பரீட்சை நடந்தது. அப்போது, 17-வது மாணவி ஒருவர் திடீரென எழுந்து வாஷ் ரூம் சென்றுள்ளார்.
வாஷ் ரூம் சென்ற அவர் நீண்ட நேரம் பரீட்சை எழுதும் அறைக்கு திரும்பவில்லை. இதனால் பெண் ஆசிரியர் வாஷ் ரூம் சென்று பார்த்துள்ளார். அப்போது, மாணவிக்கு குறைமாத குழந்தை பிறந்து, அந்த குழந்தை அழுதியபடி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பள்ளியில் வேலைப் பார்க்கும் பணியாளர்களை அழைத்து, அந்த மாணவியை குழந்தையுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் இரண்டு உயிர்களையும் காப்பாற்றினர். இருவரும் தற்போது நலமாக உள்ளனர்.
17 வயது மாணவி என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி ஒரு மாணவன் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்த மாணவன் இது குறித்து யாரிடம் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார். இதனால் தனது பெற்றோரிடம் கர்ப்பம் அடைந்தது தொடர்பாக கூறாமல் இருந்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






