என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை பழுப்பு நிற மான்கள் நடமாட்டம்
    X

    ஆந்திராவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை பழுப்பு நிற மான்கள் நடமாட்டம்

    • ஆந்திர மாநிலம் நல்லமலா வனப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு தென்பட்டன.
    • தொடர்ந்து அதிக அளவில் கேமராக்களை பொருத்தி பழுப்பு நிற மான்களின் நடமாட்டத்தை கண்காணிப்போம்.

    திருப்பதி:

    சிங்கரா என அழைக்கப்படும் பழுப்பு நிற மான்கள் இந்திய விண்மீன் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த வகை மான்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் உட்பட தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது. இந்தியாவில் இந்த பழுப்பு நிற மான்கள் ராஜஸ்தான் மற்றும் கர்நாடக காடுகளில் அரிதாக உள்ளன.

    இந்த வகை மான்கள் கடந்த சில ஆண்டுகளாக அழிந்து வருகிறது. ஆந்திர மாநிலம் நல்லமலா வனப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு தென்பட்டன. அதற்குப் பிறகு இந்த மான்கள் நடமாட்டம் இல்லை.

    இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் நல்ல மலா வனப்பகுதியில் பாலூட்லா என்ற பகுதியில் 2 பழுப்பு நிற மான்கள் நடமாடி வருகிறது.

    இதனை அந்த பகுதியில் உள்ள வனத்துறை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்துள்ளனர்.

    தொடர்ந்து அதிக அளவில் கேமராக்களை பொருத்தி பழுப்பு நிற மான்களின் நடமாட்டத்தை கண்காணிப்போம்.

    அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×