என் மலர்
இந்தியா

திருப்பதி மலைப்பாதையில் பக்தர் நடனமாடியபடி சென்ற காட்சி.
திருப்பதி மலை பாதையில் நடனம் ஆடியபடி சென்ற பக்தர்
- கிருஷ்ண வாசு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடனமாடியபடி மலையேறி வருவதாக வேண்டிக்கொண்டார்.
- பக்தர்கள் கிருஷ்ணா வாசு நடனமாடியபடி சென்றதை தங்கள் செல்போன்களில் வீடியோ, போட்டோ எடுத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவ்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணவாசு. பரதநாட்டிய கலைஞரான இவர் கொட்டப்பகொண்டா பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத விஞ்ஞான பீடத்தில் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
பரத நட்டியத்தில் வல்லமை படைத்த கிருஷ்ண வாசு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடனமாடியபடி மலையேறி வருவதாக வேண்டிக்கொண்டார்.
அதன்படி நேற்று ஸ்ரீவாரிமெட்டுப் மலைப்பாதையில் நடனமாடி திருமலைக்கு சென்றார். வழக்கமாக இந்த மலைப்பாதையில் நடந்தபடி திருமலையை அடைய 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.
ஆனால் கிருஷ்ண வாசு சங்கீத மகான்களான அன்னமய்யா, தியாகராஜர் கீர்த்தனைகளுக்கு ஏற்ப பாடல்களை பாடியபடி படிக்கட்டுகளில் நடனமாடியபடி 75 நிமிடத்தில் ஏறி சென்றார்.
பக்தர்கள் கிருஷ்ணா வாசு நடனமாடியபடி சென்றதை தங்கள் செல்போன்களில் வீடியோ, போட்டோ எடுத்தனர்.
இளைய சமூகத்தினரிடையே நமது கலாச்சார சங்கீதம், நடனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.






