என் மலர்tooltip icon

    இந்தியா

    தரமற்றதாக உள்ள 15 வகையான மருந்து, மாத்திரை- அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
    X

    தரமற்றதாக உள்ள 15 வகையான மருந்து, மாத்திரை- அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

    • தரமற்றதாக உள்ள மருந்து-மாத்திரைகளை ஆஸ்பத்திரிகள், கிடங்குகள், மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது.
    • பொதுமக்கள் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    கர்நாடகத்தில் 'பாராசிட்டமல்-650' உள்பட 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு கர்நாடக அரசின் சுகாதாரத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அல்ட்ரா லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் ரிங்கர்க லேக்டேட் சொல்யூசன் ஊசி, டாம் பிரான் நிறுவனத்தின் ரிங்கா்க லேக்டேட் சொல்யூசன் ஊசி, அபான் பார்மாசிட்டிகல்ஸ் நிறுவனத்தின் போலோல் பாராசிட்டமல் 650 மாத்திரை.

    பயோன் தெராப்கோட்டிக்ஸ் இன்டியா நிறுவனத்தின் மிடு கியூ-7 சிரப்பு, சேப் பேரன்டிரல்ஸ் நிறுவனத்தின் வெடர்னரி மல்டி டோஸ் விலா 200 எம்.எல்., இந்தோராம ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஸ்டான் பிளாக்ஸ் ஓட் மாத்திரை, ஸ்டெப்னா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் பேன்டோபிராசல் மாத்திரை, புனிப்யா இஞ்ஜக்டபுள் நிறுவனத்தின் சோடியம் குளோரைடு ஊசி, அதே நிறுவனத்தின் இன்னொரு சோடியம் குளோரைடு ஊசி, ஈஸ்ட் ஆப்பிரிக்கன் ஓவர்சிஸ் நிறுவனத்தின் விட்டமின் பி6, விட்டமின் டி3 மாத்திரைகள்.

    என்.ரங்கராவ் நிறுவனத்தின் ஓ சாந்தி கோல்ட் கிளாஸ் குங்கும், ரெட்னிக்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் பிராசிட்-ஓ சஸ்பென்ஷன், கே.என்.எம். பார்மா நிறுவனத்தின் கிளிமிபிரைட் மாத்திரைகள், ரிகைன் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் ஐரன் சுக்ரோஸ் இன்ஜெக்சன், ஒட்சுகா பார்மாசூட்டிகல்ஸ் இன்டியா நிறுவனத்தின் ரிங்கர்க லேக்டேட் இன்ஜெக்ஷன் ஆகிய 15 வகை மருந்து-மாத்திரைகளுக்கு கர்நாடகத்தில் தடை விதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    தரமற்றதாக உள்ள இந்த மருந்து-மாத்திரைகளை ஆஸ்பத்திரிகள், கிடங்குகள், மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. மேலும் கிடங்குகளிலும் சேமித்து வைக்கக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்கண்ட இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    Next Story
    ×