என் மலர்
இந்தியா

சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு: வர்த்தக பற்றாக்குறையும் மிக அதிகரிப்பு
- இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 155.62 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
- ஜனவரி முதல் டிசம்பர் வரையில் இந்தியா 19.75 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
சீனாவின் சுங்கத்துறை வருடாந்திர வர்த்தக தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வர்த்தக பற்றாக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
* இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 155.62 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
* கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையில் இந்தியா 19.75 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 9.7 சதவீதம் அதிகமாகும்.
* அதேவேளையில் சீனா இந்தியாவுக்கு 135.87 அமெரிக்க டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 12.8 சதவீதம் அதிகமாகும்.
* ஆனால் இந்தியா- சீனா வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 116.12 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 2023-க்குப் பிறகு 2-வது முறையாக வர்த்தக பற்றாக்குறை 100 பில்லியன் டாலருக்கு மேல் தாண்டியுள்ளது.
* 2024-ல் வர்த்தக பற்றாக்குறை 99.21 பில்லியன் டாலராக இருந்தது. சீனா 113.45 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்த நிலையில், இந்தியா 14.24 பில்லியனுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.






