என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
உலக தரவரிசை பட்டியல்: ஐ.ஐ.டி. மும்பை சாதனை- ஐ.ஐ.டி. சென்னை பின்னடைவு
- ஐ.ஐ.டி. சென்னை 250-ல் 285-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது
- ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது
இங்கிலாந்தில் உள்ள குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) என்ற அமைப்பு உலகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து உலகின் சிறந்த பல்லைக்கழக தரவரிசையை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில நேற்று வெளியிட்டுள்ள தரவரிசையில் ஐ.ஐ.டி. மும்பை 150 இடத்திற்குள் வந்து சாதனைப் படைத்துள்ளது. ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு முன் 2016-ல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) 147-வது இடத்தை பிடித்திருந்தது. அதன்பின் தற்போது ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்குமுன் இருந்ததில் இருந்து 23 வரிசை முன்னேறி 149 இடத்தை பிடித்துள்ளது.
அதேவேளையில் இந்திய அறிவியல் கழகம் 155-வது இடத்தில் இருந்து 225-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஐ.ஐ.டி. டெல்லி 174-ல் இருந்து 197-வது இடத்திற்கும், ஐ.ஐ.டி. கான்பூர் 278-வது இடத்திலும், ஐ.ஐ.டி. சென்னை 250-ல் இருந்து 285 இடத்திற்கும் பின்தங்கியுள்ளன.
க்யூ.எஸ். அமைப்பு தலைவர் கூறுகையில் ''இந்த வருடம் உலகளவில் 2900 நிறுவனங்களை பட்டியலிட்டோம். இதில் 45 இந்திய பல்கலைக்கழங்கள் இடம்பிடித்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது 297 சதவீதம் அதிகம் ஆகும். இதற்காக நான் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்'' என்றார்.