என் மலர்tooltip icon

    இந்தியா

    வனவிலங்குகளால் மலைவாழ் மக்கள் மரண பயத்தில் வாழ்வது உரிமை மீறல்- கேரள ஐகோர்ட் கருத்து
    X

    வனவிலங்குகளால் மலைவாழ் மக்கள் மரண பயத்தில் வாழ்வது உரிமை மீறல்- கேரள ஐகோர்ட் கருத்து

    • வனவிலங்குகள் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகளை தினமும் கேட்பது மனவேதனையை ஏற்படுத்துகிறது.
    • விலங்குகளின் தாக்குதல்களில் 555 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் காட்டு யானைகள், சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து பொது மக்களை தாக்கும் சம்பவம் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகிறது. அதிலும் பலர் உயிரிழந்ததால் மலை கிராம மக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டி ருக்கிறது.

    இந்தநிலையில் வன விலங்குகளால மலைவாழ் மக்கள் மரண பயத்தில் வாழ்வது உரிமை மீறல் என்று கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. கோன்னியில் உள்ள கூட்டு மக்கள் குழு தாக்கல் செய்த மனு உள்ளிட்ட பிற மனுக்கள் மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் நீதிபதி டயஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-

    வனவிலங்குகள் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகளை தினமும் கேட்பது மனவேதனையை ஏற்படுத்துகிறது. கடந்த 6 ஆண்டுகளில் கேரளாவில் காட்டு விலங்குகளின் தாக்குதல்களில் 555 பேர் கொல்லப்பட்டதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

    இனியும் அலட்சியமாக இருக்க முடியாது. மனித உயிர் விலை மதிப்பற்றது. அன்புக்குரிவர்களின் மரணத்தை ஆறுதல் வார்த்தைகள் மற்றும் நிதி உதவி ஈடுசெய்யாது. வன விலங்குகளால் மலைவாழ் மக்கள் மரண பயத்தில் வாழ வேண்டியிருப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தேவை.

    இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

    மேலும் இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், நீதிமன்ற உத்தரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலர் தெரிவிக்க வேண்டும், இழப்பீட்டு திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவையும் கேரள ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது.

    Next Story
    ×