என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    • தீ தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது.
    • தீ விபத்து நடந்த தொழிற்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி வாசிர்பூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை 8 மணிஅளவில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது.

    இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 25 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் தீ மற்ற தொழிற்சாலைகளுக்கு பரவாமல் தடுத்தனர். தீ விபத்தின்போது கரும்புகை பெருமளவில் வெளியேறியதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். தீ விபத்து நடந்த தொழிற்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    Next Story
    ×