என் மலர்tooltip icon

    இந்தியா

    லல்லு பிரசாத் கட்சியில் சீட் கொடுக்க மறுத்ததால் சட்டையை கிழித்து, தரையில் புரண்டு அழுத நிர்வாகி
    X

    லல்லு பிரசாத் கட்சியில் சீட் கொடுக்க மறுத்ததால் சட்டையை கிழித்து, தரையில் புரண்டு அழுத நிர்வாகி

    • கட்சியில் சீட் தருவாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு.
    • சீட் மறுக்கப்பட்டதால், விரக்தியில் சட்டையை கிழித்து அழுது புரண்டுள்ளார்.

    பீகார் தேர்தலில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பணம் வாங்கிக் கொண்டு அநீதி செய்வதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி மதன் ஷா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் இன்று காலை லல்லு பிரசாத் யாதவ் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். தரையில் புரண்டு இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா? என சட்டையை கிழித்துக் கொண்டு அழுது புலம்பினார்.

    பிறகு அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட சீட் தருவதாக கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறி இருந்தார். நானும் எனது தொகுதியில் பணிகளை தொடங்கி விட்டேன். ஆனால் திடீரென ரூ.2.7 கோடி ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். என குழந்தைகளின் திருமணத்தை நிறுத்தி வைத்து விட்டு பணத்தை தயார் செய்தேன். தற்போது சீட் தராமல் எல்லாம் முடிந்து விட்டது. குறைந்த பட்சமாக எனது பணத்தையாவது திருப்பி தர வேண்டும்

    இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    இவர் மதுபான் தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார். அதில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது சீட் மறுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×