என் மலர்
இந்தியா

திருப்பதி கோவில் பாதுகாப்புக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம் அமைக்க முடிவு
- புதிய தொழில் நுட்பங்கள் மூலம் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- திருப்பதி கோவில் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பதி மலையில் விமானங்கள், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி சிலர் டிரோனக்கள் பறக்க விடுகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து திருப்பதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பங்கள் மூலம் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி கோவில் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டிரோன்களை பயன்படுத்துவதை தடுப்பதற்காக டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தில் இந்து அல்லாத ஊழியர்களை மற்ற இடங்களுக்கு மாற்றம் செய்யவோ அல்லது விருப்ப ஓய்வு திட்டத்தில் வீட்டிற்கு அனுப்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சானூர், அமராவதி, ஒண்டிமிட்டா, கபில தீர்த்தம், நாராயண வனம், நாகலாபுரம் கோவில்கள் மேம்படுத்த பட உள்ளது. அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் ஆகாச கங்கா, பாப விநாசம் பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






