என் மலர்
இந்தியா

தெலுங்கானாவில் 10 நாட்கள் தியேட்டர்கள் மூடல்
- தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள பல ஒற்றைத் திரை கொண்ட தியேட்டர்கள் 10 நாட்களுக்கு மூடப்படுகிறது.
- 2 திரைகளுக்கு மேல் உள்ள வணிக வளாக தியேட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் இந்த கோடை விடுமுறையில் லாபத்தை அள்ளி தரக்கூடிய சினிமா படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் ஆந்திராவில் நடந்த பொது தேர்தல் ஆகியவற்றின் தாக்கத்தால் பொதுமக்கள் சினிமா தியேட்டர்களுக்கு வருவதை தவிர்த்தனர்.
இதனால் சினிமா பார்க்க ஆளில்லாமல் தியேட்டர்கள் வெறிச்சோடின. கடந்த 2 மாதங்களாக சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் பெரிய லாபத்தை தர தவறிவிட்டன. மேலும் தேர்தல் காரணமாக முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
சினிமா தியேட்டர்களில் வருமானம் குறைந்ததால் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள பல ஒற்றைத் திரை கொண்ட தியேட்டர்கள் 10 நாட்களுக்கு மூடப்படுகிறது.
வருகிற 14-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தொடர்ந்து சினிமா தியேட்டர்கள் மூடப்படும் என தெரிவித்துள்ளனர். 2 திரைகளுக்கு மேல் உள்ள வணிக வளாக தியேட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவித்துள்ளனர்.
பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளிவர உள்ள கல்கி 2898 கி.பி மற்றும் அல்லு அர்ஜுனனின் புஷ்பா-2, தி ரூல் போன்ற பான் இந்தியா திரைப்படங்கள் மூலம் தெலுங்கு சினிமா மீண்டும் வசூலில் களைகட்டும் என சினிமா துறையினர் தெரிவித்துள்ளனர்.






