என் மலர்tooltip icon

    இந்தியா

    அருணாச்சல பிரதேசம் சீனாவின் முக்கிய நலன்: அமெரிக்கா தகவல்
    X

    அருணாச்சல பிரதேசம் சீனாவின் முக்கிய நலன்: அமெரிக்கா தகவல்

    • இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.
    • தைவான் தங்களுடைய பகுதிய என தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.

    பென்டகன் அளித்த அறிக்கை அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அருணாச்சலம் பிரதேசம் சீனாவின் முக்கிய நலன். அருணாச்சல பிரதேசம் நலனில் பேச்சுவார்த்தை அல்லது சமரசத்திற்கு சீனா தயாராக இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சீனாவின் தலைமை தனது 'முக்கிய நலன்களின்' வரம்பை விரிவுபடுத்தி அதில் தைவான், தென் சீனக் கடலில் உள்ள இறையாண்மை கோரிக்கைகள் மற்றும் கடல்சார் பிரச்சினைகள், சென்காகு தீவுகள் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

    இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை நீணட காலமாக இருந்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தின் பெரும் பகுதியை தங்களுடையது எனக் கூறி வருகிறது. மேலும், அருணாச்சல மாநில எல்லை அருகே குடியிறுப்புகளை கட்டி வருகிறது. கட்டமைப்புகளையும் விரிவுப்படுத்தி வருகிறது.

    Next Story
    ×