என் மலர்
இந்தியா

டிசம்பர் வரை மத்திய நிதி பற்றாக்குறை 8.55 லட்சம் கோடி ரூபாய்..!
- பட்ஜெட்டில் 15.69 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை என மதிப்பீடு.
- டிசம்பர மாதம் வரை 8.55 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை என சிஏஜி தகவல்.
மத்திய அரசு ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது கிடைக்கப்பெறும் வருமானம், செலவினம் ஆகியவற்றை கணக்கீடு செய்து தோராயமான நிதி பற்றாக்குறை வெளியிடப்படும்.
அதன்படி 2025-26-ஆம் நிதி ஆண்டிக்கான பட்ஜெட்ல், ஜிடிபி-யில் 4.4 சதவீதம் அல்லது 15.69 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படலாம் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டிசம்பர் மாதம் வரை நிதி பற்றாக்குறை 8.55 லட்சம் கோடி ரூபாய் அல்லது 54.5 சதவீதம் என சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது இதே காலக்கட்டத்தில் 2024-2025 நிதியாண்டில் 56.7 சதவீதமாக இருந்தது.
டிசம்பர் மாதம் வரை 25.25 கோடி ரூபாய் அல்லது பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதில் 72.2 சதவீதம் வருவாய் பெறப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் வரை, மத்திய அரசால் செய்யப்பட்ட மொத்த செலவினம் ரூ. 33.8 லட்சம் கோடியாக இருந்தது. இது 2025-26 ஆம் ஆண்டுக்கான தொடர்புடைய வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 66.7 சதவீதம் ஆகும்.






