என் மலர்tooltip icon

    இந்தியா

    புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு CBSE ஒப்புதல்
    X

    புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு CBSE ஒப்புதல்

    • தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர்.
    • இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017ல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCFSE) 2023 மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஆகியவற்றுடன் இணைந்து, மனப்பாடம் செய்வதிலிருந்து திறன் அடிப்படையிலான கற்றலுக்கு கவனத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர். இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017ல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×