என் மலர்tooltip icon

    இந்தியா

    இடைத்தேர்தல் முடிவுகள்: தெலுங்கானா, ராஜஸ்தானில் காங்கிரஸ்.. ஜம்மு காஷ்மீர், ஒடிசாவில் பாஜக வெற்றி முகம்
    X

    இடைத்தேர்தல் முடிவுகள்: தெலுங்கானா, ராஜஸ்தானில் காங்கிரஸ்.. ஜம்மு காஷ்மீர், ஒடிசாவில் பாஜக வெற்றி முகம்

    • பீகார் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில் இடைத்தேர்தல் வாக்குகளும் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.
    • பாஜகவின் லங்காலா தீபக் ரெட்டியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நவம்பர் 11 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள தோகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இன்று பீகார் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில் இடைத்தேர்தல் வாக்குகளும் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், தெலுங்கானாவில் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை சமூக வேட்பாளர் நவீன் யாதவ் 99,120 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட சந்திரசேகராவ் உடைய பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் சுனிதா கோபிநாத் (74,462 வாக்குகள்) மற்றும் பாஜகவின் லங்காலா தீபக் ரெட்டியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

    பிஆர்எஸ் வேட்பாளர் சுனிதா கோபிநாத் உடைய கணவர் ஜூப்லி ஹில்ஸ் எம்எல்ஏவாக இருந்த நிலையில் அவர் மறைவின் பின் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் அன்டா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் ஜெயின் பாயா 65,571 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    மிசோரம் மாநிலத்தில் டாம்பா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மிசோ நேஷனல் பிரன்ட் கட்சியை சேர்ந்த அம்மாநில முன்னாள் அமைச்சர் லலிதாங்லியானா, எதிர்த்து போட்டியிட்ட ஜோரம் பீப்புள் மூமென்ட் வேட்பாளர் வன்லால்சைலோவாவை விட 562 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் நாகோர்டா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவின் தேவயாணி ராணா 42,350 வாக்குகள் பெற்று, 24,647 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மறைந்த பாஜக தலைவர் தேவேந்தர் சிங் ராணாவின் மகள் ஆவார்.

    அதேபோல் ஒடிசாவில் நுவாபாடா தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜே தோலாகியா 56,819 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மற்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×