search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிக்கிம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்பு
    X

    சிக்கிம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்பு

    • வெள்ளத்தில் மொத்தம் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயினர்.
    • காணாமல் போன 14 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்கள் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    சிக்கிமில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், இந்த வெள்ளத்தில் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயினர். இதில், அன்றைய தினம் ஒரு ராணுவ வீரர் மட்டும் மீட்கப்பட்டார் எனவும் கூறப்பட்டது.

    இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 23 ராணுவ வீரர்களில் எட்டு ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களின் துயரமான இழப்பு மிகவும் வேதனை அளிக்கிறது. காணாமல் போன மீதமுள்ள 14 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களின் தியாகம், தேசத்தின் சேவைக்காக முன்னோக்கிச் சென்ற அவர்களது தியாகம் என்றும் மறக்க முடியாது " என்றார்.

    Next Story
    ×