என் மலர்
இந்தியா

போபால் வனவிலங்கு சரணாலயத்தில் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தை பலி
- நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
- சிறுத்தைக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வந்தது.
போபால்:
நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு சிறுத்தை மத்தியபிரதேசம் போபாலில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அந்த சிறுத்தைக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த சிறுத்தை நேற்று பரிதாபமாக இறந்தது. இதனை வனவிலங்கு சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர். இடமாற்றம் காரணமாகவும், சிறுநீரக பாதிப்பாலும் சிறுத்தை இறந்ததாக கூறப்பட்டது.
Next Story






