search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்திய ராணுவத்தில் அப்பாச்சி ஹெலிகாப்டர் பிப்ரவரியில் இணைப்பு
    X

    இந்திய ராணுவத்தில் அப்பாச்சி ஹெலிகாப்டர் பிப்ரவரியில் இணைப்பு

    • கடந்த 2015-ம் ஆண்டில் இந்திய விமான படைக்காக 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    • அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் மாதத்துக்குள் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

    அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்க ராணுவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் ஆதரவு நாடுகளான இங்கிலாந்து, இஸ்ரேல் உள்பட 18 நாடுகள் ராணுவத்தில் இந்த வகை ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.

    கடந்த 2015-ம் ஆண்டில் இந்திய விமான படைக்காக 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவை தற்போது விமான படையில் சேவையாற்றி வருகின்றன. இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்துக்காக ரூ.5,691 கோடியில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்க 2020-ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    அதன்படி அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் மெசா பகுதியில் உள்ள போயிங் ஆலையில் இந்திய ராணுவத்துக்காக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூன் மாதத்துக்குள் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

    Next Story
    ×