என் மலர்
இந்தியா

தனது தாயார் பிறந்தநாளில் 2 ஒட்டக சிவிங்கிகளை தத்தெடுத்த பவன் கல்யாண்
- எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விலங்கு பிரியர்கள்.
- வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவிற்குச் சென்றார். அவர் தனது தாய் அஞ்சனர் தேவியின் பிறந்தநாளை முன்னிட்டு 2 ஒட்டகச்சிவிங்கிகளை ஒரு வருடத்திற்கு தத்தெடுத்தார்.
பின்னர் பவன் கல்யாண் கூறுகையில், எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விலங்கு பிரியர்கள்.
வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் வனவிலங்குகள் மிகவும் முக்கியம் வாய்ந்தது. அவற்றைத் தத்தெடுத்து உயிரியல் பூங்காக்களின் வளர்ச்சியில் பங்கேற்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றார்.
Next Story






