என் மலர்
இந்தியா

இந்தியாவில் 233 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் அமேசான்..!
- பிளிப்கார்ட், ரிலையன்ஸ்க்கு இணையாக இந்தியாவில் இணைய வணிகத்தில் சிறந்து விளங்குகிறது.
- 2030-க்குள் 26 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சேவையை நீட்டிக்கும் வகையில், அமேசான் நிறுவனம் கட்டமைப்புகளை விரிவுப்படுத்த 233 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
நெட்வொர்க் மற்றும் டெலிவரி பாதுகாப்பு செயல்பாடுகளுக்கான கட்டமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக 2025-ல் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது.
வால்மார்ட்டின் பிளிப்கார்ட், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீட்டைல் ஆகியவற்றிற்கு போட்டியாக இந்தியாவில் இணைய வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமேசான், 2030-க்கும் 26 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
Next Story






