என் மலர்tooltip icon

    இந்தியா

    49 வருட ரூ. 7.65 வழிப்பறி வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்
    X

    49 வருட ரூ. 7.65 வழிப்பறி வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்

    • 1977-ல் அடையாளம் தெரியாத நபர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
    • போலீசார் அவர்களை தேடியும் கிடைக்கவில்லை.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 ரூபாய் 65 பைசாவை வழிப்பறி செய்ததாக 50 வருடத்துக்கும் மேலாக நிலுவையில் இருந்த வழக்கை மசாகோன் நீதிமன்ற நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், இதுபோன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் சுமை அதிகரிக்கிறது. புகார்தாரர் உயிரோடு இருந்தால் அரசு தரப்பில் ரூ.7.65-ஐ வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    1977-ல், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் 7 ரூபாய் 65 பைசாவை பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடியும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்ட வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×