search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    414-வது ஆண்டு தசரா விழா: சாமுண்டீஸ்வரி ஊர்வலத்தை பார்க்க லட்சக்கணக்கானோர் குவிந்தனர்
    X

    மின்னொளியில் ஜொலிக்கும் மைசூரு அரண்மனை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    414-வது ஆண்டு தசரா விழா: சாமுண்டீஸ்வரி ஊர்வலத்தை பார்க்க லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

    • மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.
    • மைசூரு அரண்மனையில் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கர்நாடகா:

    கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் மன்னர் காலம் தொட்டு கொண்டாடப்படும் மைசூரு தசரா விழா உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா 413 ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 414-வது ஆண்டாக இந்த ஆண்டு தசரா விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இதனால் மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இளைஞர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர் கண்காட்சி திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை வழக்கமான கொண்டாட்டத்துடன் நடந்தது. இதற்கிடையே மைசூரு அரண்மனையிலும் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இந்த பூஜைகளை அரண்மனை மன்னர் யதுவீர் தலைமையில் தொடங்கி அதைத்தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நவராத்திரி விழா, தசரா விழாவையொட்டி மன்னர் யதுவீர் தர்பார் நடத்துவதற்காக தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிம்மாசனத்துக்கு அரண்மனை முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் ராஜ உடையில் வீரநடைபோட்டு மன்னர் யதுவீர் தர்பாருக்கு வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.

    மைசூருவில் குவிந்த பொதுமக்கள்

    இந்த நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக யானைகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளியதும் தங்க அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யூ என்ற யானை தலைமையில் 14 யானைகள் மைசூரு நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக மண்டபம் வரை சென்றடையும்.

    பின் விளையாட்டு மைதானத்தில் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த விழாவை காண மைசூருவில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரெயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×