என் மலர்
இந்தியா

போதை பொருள் கடத்தியவர்களிடம் லஞ்சம் வாங்கிய கலால் ஊழியர்கள் 4 பேர் 'சஸ்பெண்டு'
- போதை பொருள் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்டதாக புகார் எழுந்தது.
- கலால் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது உறுதியானது.
திருவனந்தபுரம்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு போதை பொருட்களை சிலர் கடத்தி வந்தனர். அவர்களை வயநாடு முத்தங்கா சோதனை சாவடியில் பணியில் இருந்த கலால் ஊழியர்கள் பிரபாகரன், அஜிஸ், பாலகிருஷ்ணன், சுதீஷ் ஆகியோர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கொண்டு போதை பொருள் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்டதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் கலால் துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரி விசாரணை நடத்தினார். அதில், கலால் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் சஸ்பெண்டு செய்து கலால் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story






