என் மலர்
இந்தியா

பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீர்
மங்களூருவில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீருடன் 3 வாலிபர்கள் கைது
- மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் பணம்பூர் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றனர்.
- மங்களூர் மாநகர போலீசார் 900 கிராம் எடை கொண்ட ரூ.90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்தனர்.
மங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் பணம்பூர் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் திமிங்கல உமிழ்நீர் என்று அழைக்கப்படும் அம்பர்கிரிசை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் உடுப்பி மாவட்டம் சாலிகிராமத்தை சேர்ந்த ஜெயகரா (39), சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவை சேர்ந்த ஆதித்யா (25) மற்றும் ஹாவேரி மாவட்டம் சிகான் பகுதியை சேர்ந்த லோகித் குமார் என்று தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து மங்களூர் மாநகர போலீசார் 900 கிராம் எடை கொண்ட ரூ.90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.






