என் மலர்
இந்தியா

கேரளாவில் மங்களூரு-எர்ணாகுளம் வழித்தடத்தில் 2-வது வந்தே பாரத் ரெயில்
- கேரளாவிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டு அதற்கான பெட்டிகள் கேரளா வந்தடைந்தது.
- விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
திருவனந்தபுரம்:
இந்தியா முழுவதும் அதிநவீன வசதிகள் அடங்கிய வந்தே பாரத் ரெயில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் காசர்கோடு-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டு அதற்கான பெட்டிகள் கேரளா வந்தடைந்தது. தற்போது இந்த ரெயில் மங்களூரு-எர்ணாகுளம் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக திருவனந்தபுரம் வரை வந்தே பாரத் ரெயிலை இயக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் சில நடைமுறை சிக்கல் காரணமாக எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. மங்களூரு சென்ட்ரலில் வந்தே பாரத் ரெயில்களில் பராமரிப்புக்கான மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் சோதனை ஓட்டம் நடை பெற உள்ளது.
Next Story






