search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நவாப் மாலிக்கின் சொத்துக்கள் முடக்கம்
    X
    நவாப் மாலிக்கின் சொத்துக்கள் முடக்கம்

    நவாப் மாலிக்கின் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

    மும்பை கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நவாப் மாலிக் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
    மும்பை:

    மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மராட்டிய மந்திரி நவாப் மாலிக் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும், நவாப் மாலிக் மீது பணமோசடி புகார்களும் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

    இதற்கிடையில், பணமோசடி வழக்கில் நவாப் மாலிக்கை கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நவாப் மாலிக் தற்போது மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

    இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நவாப் மாலிக் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு நவாப் மாலிக்கிற்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. 

    இதனை தொடர்ந்து, மும்பை கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நவாப் மாலிக் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு

    இந்நிலையில், பண மோசடி தொடர்பான வழக்கில் நவாப் மாலிக்கின் பல்வேறு சொத்துக்களை அமலாக்கத்துறையினர் இன்று முடக்கியுள்ளனர். நவாப் மாலிக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 147 ஏக்கர் விவசாய நிலம், வணிக கட்டிடங்கள், குடியிருப்புகள் உள்பட பல்வேறு சொத்துக்களை அமலாக்கத்துறையினர் இன்று முடக்கியுள்ளனர்.

    Next Story
    ×