என் மலர்
இந்தியா

சேதமடைந்த வீடுகள்
பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை எதிரொலி: வீடுகளுக்கு தீ வைப்பு- ஏழு பேர் உயிரிழப்பு
மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை காரணமாக ஏற்பட்ட வன்முறையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷேய்க். இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் ஷேய்க் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷெய்க் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனத் தெரிகிறது. இவரது உடல் சொந்த ஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இவரது கொலை காரணமாக அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது திடீரென ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. போக்டுய் கிராமத்தில் உள்ள வீடுகளை சூறையாடிய நிலையில், குடிசைகளை தீவைத்தும் எரித்தன.
இந்த சம்பவத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாம்பலான வீடுகளில் இருந்து அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






