என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவராஜ் சிங் சவுகான்
    X
    சிவராஜ் சிங் சவுகான்

    கொரோனா பாதிப்பு- வீட்டில் இருந்தே பணிகளை கவனிக்கும் மத்திய பிரதேச முதல்வர்

    கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் கொரோனா தடுப்பு நெறிமுறைகளின்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக சிவராஜ் சிங் சவுகான் கூறி உள்ளார்.
    போபால்:

    மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

    லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் கொரோனா தடுப்பு நெறிமுறைகளின்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக அவர் கூறி உள்ளார்.

    மேலும், தனக்கான அனைத்து பணிகளையும் வீட்டில் இருந்தபடியே காணொலி வாயிலாக மேற்கொள்வதாக கூறிய அவர், நாளை சிரோமணி ரவிதாஸ் ஜெயந்தி நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×