என் மலர்
செய்திகள்

மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து
மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் தீவிபத்து- 10 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 17 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீயில் சிகிச்சை 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






