என் மலர்
செய்திகள்

கோவிஷீல்டு
6 மாசம் ஆகிடுச்சா... பூஸ்டர் டோஸ் போட்டுக்குங்க: ஆதர் பூனவாலா சொல்கிறார்
கோவிஷீல்டு இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொண்டவர்கள் 3-வது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆதர் பூனவாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்போது அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா, சீனாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது தடுப்பூசிகளை உருவாக்கிய நிறுவனங்கள் கொரோனாவிற்கு எதிராக 95 சதவீதத்திற்கு மேல் செயல்திறன் கொண்டது என அறிவித்தன. ஆனால், திடீரென கொரோனா வைரஸ் உருமாறியது. இந்த உருமாறிய கொரோனா மிகத்தீவிரம் கொண்டதாக இருந்ததால், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொண்டவர்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அமெரிக்கா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கோவிஷீல்டு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 6 மாதம் கழித்து 3-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அதை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைவர் ஆதர் பூனவாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2-வது டோஸ் செலுத்திக்கொண்ட 6 மாதங்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தது தெரியவந்ததாகவும், எனவே தானும் 3-வது டோஸ் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனத்தில் பணிபுரியும் 8 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் 3-வது டோஸ் செலுத்தப்பட உள்ளதாகவும் ஆதர் பூனவாலா தெரிவித்தார்.
இந்தியாவில் இதுவரை 56 கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்டுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story