என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கேரள கோவில்களில் பக்தர்களுக்கு மீண்டும் தடை

    கேரளாவில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபட இன்று முதல் ஜூன் 30 வரை மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கேரளா:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவில் முதன் முதலாக கேரள மாநிலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கொரோனா வைரஸ் தொற்றை கேரள மாநிலம் சிறப்பான வகையில் கட்டுப்படுத்தியது. தினந்தோறும் ஒன்று, இரண்டு, இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்தது.

    இதனால் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி 2 மாதங்களுக்கு பிறகு கடந்த 9-ந்தேதியில் இருந்து கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதித்தனர்.

    இருப்பினும் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,324 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் கோவில்களில் பக்தர்கள் வழிபட இன்று முதல் ஜூன் 30 வரை மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கோவில்களில் பக்தர்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×