search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஊரடங்கு அமலில் இருப்பதால் கேரளாவில் ரம்ஜான் தொழுகைகள் ரத்து

    நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கேரளாவில் ரம்ஜான் தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கேரளா:

    கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு நாளை தொடங்க உள்ளது. இந்த நாள்களில் அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெறும். இது பற்றி கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளது. இதனால் ரம்ஜான் தொழுகைகளும் நடைபெறாது. இது தொடர்பாக மத தலைவர்களுடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் மசூதிகளில் தொழுகை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கேரளாவில் உள்ள முஸ்லிம்களுக்கு மத தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் ரம்ஜான் நோன்பு கடைபிடிப்போர் வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×