என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ராஜினாமா
    X

    குஜராத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ராஜினாமா

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ஆஷா பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியை விட்டும் விலகினார். #GujaratMLA #CongressMLA #AshaPatel
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 99 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. 77 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ஆஷா பட்டேல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியை விட்டும் விலகினார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் கட்சிக்குள் சாதிரீதியான பாகுபாடுகள் அதிகரித்து வருவதாகவும், மாநில நிர்வாகிகள் தனக்கு மதிப்பளிப்பது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. குன்வர்ஜி பவாலியா என்பவர் கருத்து வேற்றுமை காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு உடனடியாக குஜராத் மந்திரிசபையில் இடம் கிடைத்தது நினைவிருக்கலாம். #GujaratMLA #CongressMLA #AshaPatel 
    Next Story
    ×