என் மலர்
செய்திகள்

கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி சொத்து மதிப்பு ரூ.94 கோடி
கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதாவுக்கு ரூ.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AnithaKumaraswamy #Assets
பெங்களூர்:

சட்டசபை தேர்தலில் குமாரசாமி 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றார். இதில் ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதை தொடர்ந்து ராமநகர் மற்றும் ஜாம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியமகவுடா விபத்தில் இறந்ததால் ஜாம்கண்டி தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் ராமநகர் தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.
அனிதா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து மதிப்பு குறிப்பிட்டு இருந்தது. 55 வயதான அனிதாவுக்கு ரூ.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.7.88 கோடி மதிப்புள்ள சொத்து கணவருக்கு சொந்தமானது.
காங்கிரஸ் ஆதரவுடன் அனிதா களத்தில் நிற்கிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
அனிதா 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதுசிரி தொகுதியில் போடியிட்டு வெற்றிபெற்றார். 2012-ல் சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AnithaKumaraswamy #Assets
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

Next Story