search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியில் காங். ஆட்சி அமைந்தால் ரபேல் விமான பேரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் - ஆனந்த் சர்மா
    X

    மத்தியில் காங். ஆட்சி அமைந்தால் ரபேல் விமான பேரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் - ஆனந்த் சர்மா

    ரபேல் விமானம் கொள்முதல் செய்வதில் உள்ள முறைகேடுகள் தொடர்பாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆன்ந்த் சர்மா தெரிவித்துள்ளார். #RafaleDeal
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 32 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தத்தை பாரதிய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தினார்கள்.

    அதில் ஒரு ரபேல் போர் விமானம் ரூ.520 கோடி கொடுத்து விமானத்தை வாங்க காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், ஆனால் அதற்கு பதிலாக ரூ.1600 கோடி கொடுத்து விமானத்தை வாங்க பாரதிய ஜனதா அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    இந்நிலையில், இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, அவர்களிடம் கூறுகையில், அதிக விலை கொடுத்து ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், ரபேல் விமான கொள்முதலில் முறைகேடுகள் நடைபெறவில்லை எனில் நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த அரசு பயப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், ரபேல் ஒப்பந்தம் இந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் ஆகும்.

    இந்த விவகாரத்தில் சரியான விசாரணை மேற்கொள்ளாத பட்சத்தில், அடுத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரபேல் விமான ஊழல் தொடர்பாக நீதி விசாரணை அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். #RafaleDeal
    Next Story
    ×