என் மலர்
செய்திகள்

வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன் படத்துடன் துர்காவதி பெயர்
பாராளுமன்ற தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வெளியான வாக்காளர் பட்டியலில் துர்காவதி என்ற பெயருக்கு அருகில் நடிகை சன்னி லியோன் படம் இடம்பெற்றுள்ளது. #SunnyLeone #UPvoterslist
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியாளருக்கும் உயரதிகாரிக்கும் இடையில் சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பணிநீக்கம் செய்து உயரதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
வேலை பறிபோன ஆத்திரத்தில் அந்த பணியாளர் வாக்காளர் பட்டியலில் உள்ள சில பெயர்களுக்கான புகைப்படங்களில் தனது ‘சில்மிஷத்தை’ காட்டிவிட்டு சென்றுள்ளார்.

துர்காவதி என்னும் வாக்களரின் பெயருக்கு நடிகை சன்னி லியோன் புகைப்படமும், சிலரது பெயரில் மான், புறா போன்ற புகைப்படங்களையும் வைத்த விஷ்னு சர்மா என்னும் அந்த பணியாளர், அம்மாநில முன்னாள் மந்திரியான நரட் ராய் என்பவரின் பெயருக்கு பக்கத்தில் யானை படத்தை வைத்துள்ளார்.
இதைதொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்பட்ட அவர் மீது பாலியா மாவட்டத்தில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்தில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #SunnyLeone #UPvoterslist
Next Story






