என் மலர்
செய்திகள்

பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் காலமானார்
மூத்த பத்திரிகையாளரும் பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95. #RIPKuldeepNayyar
புதுடெல்லி:
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் 1923-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பிறந்தவர் குல்தீப் நய்யார். பத்திரிகையாளராக தன் பணியைத் தொடங்கிய இவர் எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பிரபலம் ஆனார். குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 'எல்லைகளுக்கு இடையே', 'தூரத்து உறவினர்கள்: துணைக் கண்டத்தின் கதை', 'நேருவுக்குப் பிறகு இந்தியா' மற்றும் 'ஸ்கூப்' போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள்.
இடதுசாரி பார்வை கொண்ட அரசியல் விமர்சகரான இவர் மாநிலங்களைவை உறுப்பினராகவும், ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், 95 வயதான நய்யார், முதுமை சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIPKuldeepNayyar

Next Story