search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜின்னா, நேரு பற்றிய தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார் தலாய்லாமா
    X

    ஜின்னா, நேரு பற்றிய தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார் தலாய்லாமா

    சுதந்திரத்திற்கு பிறகு பிரிவினை ஏற்படாமல் ஒன்றிணைந்த இந்தியாவிற்கு முகமது அலி ஜின்னா பிரதமராக இருந்திருக்கலாம் என்ற தனது கருத்துக்கு தலாய்லாமா மன்னிப்பு கோரியுள்ளார்.#DalaiLama
    தர்மசாலா:

    கோவா மாநிலம், பனாஜியில் அமைந்துள்ள கோவா மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற நிக்ழ்சியில் பங்கேற்ற  தலாய்லாமா மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், சுதந்திரத்திற்கு பிறகு பிரிவினை ஏற்படாமல் ஒன்றிணைந்த இந்தியாவிற்கு முகமது அலி ஜின்னா பிரதமராக இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்தார்.

    மேலும், சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரே சுதந்திரத்திற்கு பிறகு இந்திய பிரதமர் ஆக வேண்டும் என்பதை மகாத்மா காந்தி விரும்பினார். ஆனால், காந்தியின் விருப்பத்தை நேரு ஏற்கவில்லை. நேருவிற்கு இருந்த சிறிது சுயநலமே இதற்கு காரணம் என தான் நினைப்பதாக தாலாய்லாமா கூறியிருந்தார்.

    அவரது இந்த கருத்து பரவலாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மன்னிப்பு கோரியுள்ளார். ‘எனது கருத்து சர்ச்சையை உருவாக்கிவிட்டது, நான் கூறியதில் தவறு இருக்குமானால் அதற்கு தான் மன்னிப்பு கோருகிறேன்’ என தலாய்லாமா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #DalaiLama
    Next Story
    ×